என்ன ஒரு தெனாவட்டு.. மாணவனை காலால் எட்டி உதைத்த பள்ளி ஆசிரியர்.. தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா?

By vinoth kumar  |  First Published Oct 15, 2021, 11:41 AM IST

12ம் வகுப்பு மாணவர் ஒருவர் வகுப்புக்கு சரியாக வரவில்லை என்ற காரணத்திற்காக அவரை முட்டிபோட வைத்து பிரம்பால் ஆசிரியர் கடுமையாக அடித்துள்ளார். இதோடு நிற்காமல் அந்த மாணவரை ஆசிரியர் கால்களால் எட்டியும் உதைத்துள்ளார்.


சிதம்பரத்தில் பள்ளி மாணவனை பிரம்பால் அடித்து கால்களால் எட்டி உதைத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நந்தனார் அரசுப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 6ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், 12ம் வகுப்பு மாணவர் ஒருவர் வகுப்புக்கு சரியாக வரவில்லை என்ற காரணத்திற்காக அவரை முட்டிபோட வைத்து பிரம்பால் ஆசிரியர் கடுமையாக அடித்துள்ளார். இதோடு நிற்காமல் அந்த மாணவரை ஆசிரியர் கால்களால் எட்டியும் உதைத்துள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

இந்த காட்சியை படம் பிடித்த சக மாணவர் அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இந்த காட்சியை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்து கொதிப்படைந்தனர். உடனடியாக இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென என வலியுறுத்தி வந்தனர். 

இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் மாணவன் சஞ்சய் கொடுத்த புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து ஆசிரியர் சுப்பிரமணியனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிதம்பரம் கிளை சிறையில் அடைத்தனர். மாணவர்களை தாக்கிய ஆசிரியர் சுப்பிரமணியனை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். 

click me!