ஆன்லைனில் படிக்க பெற்றோர் செல்போன் வாங்கி தர மறுத்தால் 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைனில் படிக்க பெற்றோர் செல்போன் வாங்கி தர மறுத்தால் 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுதொண்டமாதேவியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரின் மகன் விக்னேஷ் (15). 10ம் வகுப்பு படித்து வருகிறார். ஊரடங்கு என்பதால் ஆன்-லைன் வாயிலாக வகுப்பு நடைபெற்று வந்த நிலையில் விக்னேஷிடம் செல்போன் இல்லாததால் வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை என கூறப்படுகிறது.
undefined
இதனால் செல்போன் வாங்கித் தருமாறு தன் தந்தையிடம் மகன் விக்னேஷ்கேட்டு வந்துள்ளார். ஆனால், முந்திரிக்கொட்டை சேகரித்து வாழ்வாதாரத்தை நடத்தி வரும் விஜயகுமாரால் மகனுக்கு செல்போன் வாங்கித் தர இயலாத சூழல் இருந்தது. இதனால் மனமுடைந்த விக்னேஷ், தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவனின் சடலத்தை பார்த்து பெற்றோர், உறவினர்கள் பலரும் கண்ணீர் விட்டு கதறி துடித்தனர்.
இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வடிரைந் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.