கலப்பு திருமணம் செய்த பெண்ணை அனுப்பி வைக்குமாறு குறிப்பிட்ட சமூகத்தினர் தகராறு - கடலூரில் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Jul 25, 2023, 2:20 PM IST

பண்ருட்டியில் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்ட பெண்ணை பிரித்து வைக்க கோரி பெற்றோர்கள் இஸ்லாமிய உறவினர்கள் காவல் நிலையத்தில் வாக்குவாதம்- போலீசார் பேச்சுவார்த்தை.


கடலூர் மாவட்டம், பண்ருட்டி பனங்காட்டு தெருவைச் சேர்ந்தவர் விஜயபாஸ்கர் (வயது 27). ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரும் திருவதிகை பகுதியைச் சேர்ந்த ஆயிஷா பேகம் (21) ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் கலப்புத் திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பெண்ணை பிரித்து வைக்க கோரி பண்ருட்டி காவல் துறையினரிடம் புகார் கொடுத்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

புகாரின் பேரில் காதல் திருமணம் செய்து கொண்ட இருவரையும் அழைத்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் காதல் திருமணம் செய்து கொண்ட கணவருடன் மகள் சென்றதால், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பண்ருட்டி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு சாலையில் தரையில் அமர்ந்து பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பண்ருட்டியில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து திருமணம் செய்து கொண்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என காவல்துறை உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

"மணிப்பூர் மாதிரியே உனக்கும் சேலையை உருவணுமா?" மேடையிலேயே திமுக பெண் சேர்மனுக்கு நடந்த கொடுமை!

இந்த நிலையில் காதல் திருமணம் செய்து கொண்ட விஜயபாஸ்கர் - ஆயிஷா பேகம் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

click me!