தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அவரது கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்று வருகிற நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு தெரியும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
கடலூரில் பேராயர் அபிஷேக ஆராதனை விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க, சாதி, மதம், கலாசாரம் என்ற பெயரால் மக்களை வேறுபடுத்த வேண்டும் என்று சிலர் செயல்பட்டு வருகிறார்கள்.
கிராமப்புற ஏழை மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பள்ளிக்கூடங்களை உருவாக்கினர். திராவிட மாடல் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது தான். இந்தியாவை பொருளாதாரத்தில் 167-வது இடத்துக்கு கொண்டு சென்றவர்கள் தான் இந்தியாவை வல்லரசாக மாற்றுவோம் என்று கூறுகிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி நிர்வாகத்தால் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். திருச்சபைகளுக்கு அச்சுறுத்தல் விடுப்பவர்கள் தமிழகத்தில் வாலாட்ட முடியாது என்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், கவர்னர் உரை பற்றி அண்ணாமலை கூறிய கருத்துக்கு பதிலளிக்கையில், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் மோடி கூறினார். 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை கிடைத்ததா? 32 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்தார்கள். ஆனால் 30 ஆயிரம் கோடி ரூபாய் தனியார் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்துள்ளார்.
விருதுநகரில் பல்கலைக்கழகத்தில் ஒரே ஊரை சேர்ந்த மாணவன், மாணவி தூக்கிட்டு தற்கொலை
இது எல்லாம் உண்மையா? பொய்யா? பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை அவரது கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்று வருகிற நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தபிறகு தெரியும் என கூறினார்.