தனிமை முகாம்களில் இருந்து 146 பேர் டிஸ்சார்ஜ்..! கெத்து காட்டும் கடலூர்..!

Published : May 15, 2020, 03:36 PM ISTUpdated : May 15, 2020, 03:40 PM IST
தனிமை முகாம்களில் இருந்து 146 பேர் டிஸ்சார்ஜ்..! கெத்து காட்டும் கடலூர்..!

சுருக்கம்

கடலூர் மாவட்டத்தில் இன்று 146 பேர் தனிமை முகாம்களில் இருந்து டிஸ்சார்ஸ் செய்யப்பட்டுள்ளனர். அங்கு கோயம்பேடு சந்தையால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. இதனால் கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்த பலர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொடிய வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுரவேகம் எடுத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தினமும் 500ஐ கடந்திருந்த நிலையில் நேற்று 447 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,674 ஆக உயர்ந்திருக்கிறது.

இன்றைய நிலவரப்படி 2,240 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் 363 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,274 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நீங்கிய மாவட்டங்களாக ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இன்று 146 பேர் தனிமை முகாம்களில் இருந்து டிஸ்சார்ஸ் செய்யப்பட்டுள்ளனர். அங்கு கோயம்பேடு சந்தையால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. இதனால் கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்த பலர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் 14 நாட்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த 146 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லாததால் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 146 பேரையும் கடலூர் ஆட்சியர், அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் ஆகியோர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். கடலூர் மாவட்டத்தில் தற்போது வரை 413 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

ஓயாத அடை மழை! வீட்டின் சுவர் இடிந்தது! பறிபோன தாய் மகள் உயிர்! கண் கலங்கிய அமைச்சர்!
தேர்தல் முன்விரோத தகராறு கொ* வழக்கு: 9 பேரின் வாழ்க்கையை மாற்றிய தீர்ப்பு! கதறும் குடும்பம்!