கடலூரில் அதிர்ச்சி... மக்களோடு நேரடித் தொடர்பில் இல்லாத 14 காவலர்களுக்கு கொரோனா... சமூக பரவல் பீதி..?

By vinoth kumar  |  First Published May 12, 2020, 1:05 PM IST

மக்களோடு நேரடித் தொடர்பில் இல்லாத பயிற்சிப் பள்ளியில் பயிற்சியில் இருந்த  14 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்களோடு நேரடித் தொடர்பில் இல்லாத பயிற்சிப் பள்ளியில் பயிற்சியில் இருந்த  14 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகம் முழுவதும்  கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 8002 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 4371 பேருடன் சென்னை முதலிடத்திலும், 440 பேருடன்திருவள்ளூர் 2வது இடத்திலும், 395 பேருடன் கடலூர் 3வது இடத்தில் இருந்து வருகிறது. இதில், பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையில் தொடர்புடையவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில்,கடலூரில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட 134 பெண் காவலர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் முன்னெச்சரிக்கை கருதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 10 பேருக்குக்  கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், அங்கு பணியாற்றிய ஓர் உதவி ஆய்வாளருக்கும், இரண்டு தலைமைக் காவலர்களுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து இவர்கள் 13 பேரும் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பயிற்சி நிறுத்தப்பட்டு பயிற்சியில் உள்ள எஞ்சிய 124 பெண் காவலர்களும் பயிற்சி மையத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், கடலூர் காவலர் பயிற்சிப் பள்ளியும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மக்களோடு நேரடித் தொடர்பில் இல்லாத பயிற்சிப் பள்ளியில் பயிற்சியில் இருந்தவர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!