நெய்வேலி அனல் மின் நிலையத்தின் 2வது ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 7 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.
நெய்வேலி அனல் மின் நிலையத்தின் 2வது ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 7 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.
நெய்வேலி அனல் மின் நிலையத்தின் 2வது ஆலையின் 6வது யூனிட்டில் திடீரென பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. என்.எல்.சிக்கு உள்ளேயே தீயணைப்பு வீரர்கள் இருப்பார்கள். எனவே அவர்கள் உடனே தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் நிலையில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கால் தொழிற்சாலைகள் எல்லாம் இதுவரை மூடப்பட்டிருந்ததால் குறைவான மின் உற்பத்தியே செய்யப்பட்டுவந்தது. ஊரடங்கு தளர்வால் சில தொழிற்சாலைகள் செயல்பட தொடங்கியிருப்பதால், கூடுதல் மின் உற்பத்தி செய்யும் பணிகள் நடந்துள்ளன. இந்நிலையில், பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.