ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பின்பும் கடுமையாக்கப்படும் ஊரடங்கு ..! கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் அதிரடி!

By manimegalai a  |  First Published Apr 18, 2020, 5:45 PM IST

உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை உண்டாக்கி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் அதி வேகமாக பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி 14,387 பேருக்கு இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் 480 பேர் மரணமடைந்துள்ளனர். 
 


உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை உண்டாக்கி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் அதி வேகமாக பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி 14,387 பேருக்கு இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் 480 பேர் மரணமடைந்துள்ளனர். 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமை வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  அதே போல் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் என அனைவரும் தனிமை படுத்த பட்டுள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

நாடு முழுவதும் இருக்கும் அரசு மருத்துவமனைகள் மற்றும் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் 20 ஆம் தேதியில் இருந்து, சில இடங்களில்... ஊரடங்கு தளர்வு கொண்டு வரப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். ஆனால் கொரோனா அதிகமாக பரவி வரும் இடங்களில் இந்த தளர்வு பொருந்தாது என்பதையும் எடுத்துரைத்தார்.

அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில், ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்படும் என, கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புசெழியன் அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பில், சிவப்பு மண்டல பகுதியாக கடலூர் மாவட்டம் உள்ளதால் ஊரடங்கு தளத்தை இல்லை  என்றும், மே 3 ஆம் தேதிவரை கடுமையாக ஊரடங்கு பின்பற்றப்படும் என தெரிவித்துள்ளார். 

தற்போதைய நிலவரப்படி, கடலூர் மாவட்டத்தில் மட்டும் 20 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் தனிமை படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!