நிச்சயிக்கப்பட்ட பின் 2 பேரும் தூக்கிட்டு தற்கொலை..! உயிர் பலி வாங்கிய ரோட்ல போறவனின் கேடுகெட்ட பேஸ்புக் பதிவு..!

By vinoth kumar  |  First Published Jun 11, 2019, 12:40 PM IST

பேஸ்புக்கில் பதியப்பட்ட தவறான தகவலால், கல்லூரி மாணவியும், அவரது காதலரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெய்வேலியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


பேஸ்புக்கில் பதியப்பட்ட தவறான தகவலால், கல்லூரி மாணவியும், அவரது காதலரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெய்வேலியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த குறவன் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன் மகள் ராதிகா(19).  கடலூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், எம்.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே ஊரில் வசிக்கும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவருக்கும், ராதிகாவின் அத்தை மகன் விக்னேஷ் என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் ராதிகா குறித்து பேஸ்புக்கில் ஆபாசப் பதிவை பதிவிட்டுள்ளார். இதையறிந்த ராதிகாவும் அவரைத் திட்டி பதிவிட்டுள்ளார். இதனால் பிரேம்குமார் தனது உறவினர்களுடன் வந்து ராதிகா வீட்டில் பிரச்சனை செய்துள்ளார். பின்னர் ராதிகா உறவினர்களும் பிரேம்குமார் வீட்டுக்குச் சென்று பிரச்சனை செய்துள்ளனர். இதனையடுத்து மனமுடைந்த ராதிகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆத்திரம் அடைந்த மாணவியின் உறவினர்களும், கிராமத்தினரும் பிரேம்குமார் வீட்டை அடித்து நொறுக்கியுள்ள நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொள்வதாக இருந்த அவரது அத்தை மகன் விக்னேஷ், ராதிகா இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்து அவரும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து, விக்னேஷின் தந்தையும், ராதிகாவின் தந்தையும் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதனையடுத்து தலைமறைவான பிரேம்குமாரை கைது செய்ய வேண்டும் என்றும், ராதிகா மரணத்திற்கு நியாயம் கேட்டும் பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதனையடுத்து போலீஸ் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனையடுத்து ராதிகா மற்றும் விக்னேஷ் உடல்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

click me!