கடலுார் மாவட்டம் பண்ருட்டி மேலப்பாளையம் சுந்தர் நகரைச் சேர்ந்தவர் சிற்றரசு (75). இவருடைய மனைவி ராஜலட்சுமி (70). இந்தத் தம்பதியின் மகன் அருள்வேல் (36). கணினி தொழில்நுட்ப என்ஜினியர். இவருக்கும் பண்ருட்டி அருகே சிறுதொண்டாமா தேவியைச் சேர்ந்த சேகர் மகள் திவ்யாவுக்கும் (30) 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 3 வயதில் பிரணவ் என்ற மகன் உள்ளார். அருள்வேலும் திவ்யாவும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். அருள்வேல் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகிக் கிடந்ததாகக் கூறப்படுகிறது. அதற்காகப் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். பணம் அனைத்தும் சூதாட்டில் தொலைந்துள்ளது. கடன்தொல்லை தாங்க இயலாமல் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஊருக்கு வந்துள்ளார். திவ்யா மகனுடன் சென்னையில் வசித்து வந்தார்.
இதற்கிடையே கடன் கொடுத்த நண்பர்கள் அருள்வேலை ஊருக்கு தேடி வந்து, கடன் தொகையைத் திருப்பிக் கேட்டுள்ளனர். இது அவருக்குப் பலத்த அவமானத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து தாயுடன் சொல்லி அழுதுள்ளார். இதைக் கேட்டு தாயும் மனமுடைந்துள்ளார். நிலைமைக் கையை மீறிச் சென்றதைத் தொடர்ந்து அருள்வேல் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதை தன் தாய் ராஜலட்சுமியிடம் சொன்னபோது, மகனின் நிலை அறிந்து கதறிய தாய் தானும் தற்கொலை முடிவுக்கு வந்துள்ளார்.
அதன்படி இருவரும் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்தனர். வீட்டிற்கு திரும்பி வந்த சிற்றரசு இவர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இருவரையும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இருப்பினும் இருவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி கடன் தொல்லையால் தாய், மகன் தற்கொலை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரத்தில் மதுரையில் இதுபோல் ஒருவர் மனைவியுடன் தற்கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.