வென்டிலேட்டரை பிடுங்கிய மருத்துவர்.. மூச்சுத்திணறி மனைவியின் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த கணவர்..!

By vinoth kumar  |  First Published May 21, 2021, 6:04 PM IST

கொரோனா நோயாளியின் வென்டிலேட்டரை மருத்துவர் பிடுங்கியதால், நோயாளி தனது மனைவியின் கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கொரோனா நோயாளியின் வென்டிலேட்டரை மருத்துவர் பிடுங்கியதால், நோயாளி தனது மனைவியின் கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த ராஜா(49). கடந்த 5ம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் திடீரென உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது மனைவி கயல்விழி மற்றும் அவரது உறவினர்கள் ராஜாவிற்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ராஜாவிடம் இருந்து வென்டிலேட்டரை எடுத்து வேறு ஒரு நோயாளிக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

Latest Videos

undefined

இதனால், அவர் உயிரிழந்ததாகவும், அவரது உயிரிழப்புக்கு மருத்துவர்களே காரணம் எனக்கூறி திடீரென மருத்துவர்களுடன் அவரது உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், உயிரிழந்த ராஜாவின் மனைவி கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அந்த வீடியோவில் அவர் கூறுகையில் எனது கணவர் சிகிச்சையில் இருநத போதே திடீரென மருத்துவர் ஒருவர் வந்து நான் சொல்வதை சிறிதும் கேட்காமல் அவருக்கு வைக்கப்பட்டிருந்த வென்டிலேட்டரை எடுத்து சென்றார். 

இதனால், என்னிடம் என் கணவர் என்னால் சுவாசிக்க முடியவில்லை என்று கூறினார். நான் அவரது நெஞ்சில் அழுத்தி பார்த்த போது சிறிதளவு மூச்சு வந்தது. இதையடுத்து நான் மருத்துவரிடம் சென்று அவரை வந்து பார்க்குமாறு கூறினேன். ஆனால், யாரும் வ்து பார்க்கவில்லை. இதனால், அவர் இறந்துபோனார் என்று கதறி அழுதபடியே கூறினார். 

இதுதொடர்பாக மருத்துவமனை சார்பில் கூறுகையில் ராஜா வென்டிலேட்டர் இயந்திரத்தை எடுத்து வைத்துவிட்டு உணவு சாப்பிடுவார். அதன்படி நேற்றும் அவர் உணவு சாப்பிடுவதற்காக வென்டிலேட்டரை வெளியே எடுத்துவைத்திருந்தபோதுஅங்கு சென்ற மருத்துவர்கள் அந்த வென்டிலேட்டரை மாற்றிவிட்டு புதிய வென்டிலேட்டரை வைப்பதற்காக அவரது மனைவியிடம் சொல்லிவிட்டு எடுத்து சென்றனர். இந்நிலையில், ராஜா உயிரிழந்துவிட்டார். ராஜாவின் மனைவி கூறுவது போல வேறு ஒருவருக்கு பொருத்துவதற்காக வென்டிலேட்டர் எடுத்துச் செல்லப்படவில்லை. ஒருவரிடமிருந்து வென்டிலேட்டரை எடுத்து மற்றொருவருக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றனர். 

click me!