கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கடலூர் பெண் சர்வேயர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கடலூர் பெண் சர்வேயர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், அரசுப் பணியாளர்கள், காவல்துறையினரை தொடர்ந்து அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ, எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதும், உயிரிழப்பதும் தொடர் கதையாகி வருகிறது.
undefined
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் இருந்ததையடுத்து பெண் சர்வேயர் ராஜேஸ்வரி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்த பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து, இன்று காலை சிகிச்சை பலனின்றி கடலூர் பெண் சர்வேயர் ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், பெண் சர்வேயர் ராஜேஸ்வரி உடன் பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலருக்கும், கிராம உதவியாளருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 4,628 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 2,502 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,071 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 55 பேர் உயிரிழந்துள்ளனர்.