அயர்ன் பாக்சில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவன்; சீருடையை அயர்ன் செய்தபோது நேர்ந்த சோகம்

By Velmurugan s  |  First Published Nov 30, 2023, 7:01 PM IST

பண்ருட்டி அருகே கல்லூரிக்கு செல்வதற்காக சட்டையை அயனிங் செய்தபோது தனியார் பாலிடெக்னிக் மாணவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு, போலீசார் விசாரணை.


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள கனிசப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுமார் மகன் கிருஷ்ணராஜ் (வயது 17). பண்ருட்டி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை கல்லூரிக்கு செல்வதற்காக தனது சட்டையை அயனிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அயனிங் செய்யும் இயந்திரத்தில் இருந்து இவரது உடலின் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் கிருஷ்ணராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பண்ருட்டி போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

கிருஷ்ணகிரியில் யானை தாக்கி இருசக்கரத்தில் சென்ற வாலிபர் பலி; வனத்துறையினரின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு

ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து அடுத்த வாரம்  சபரிமலைக்கு செல்ல இருந்த நிலையில் கல்லூரி மாணவன் மின்சாரத் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!