தனியார் கல்லூரி கழிவறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை.. என்ன காரணம் தெரியுமா?

By vinoth kumar  |  First Published May 17, 2022, 1:31 PM IST

விழுப்புரம் மாவட்டம் சின்னபாபு சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகலிங்கம். இவரது மகள் தனலட்சுமி (19). இவர் கடலூர் செம் மண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கல்லூரியில் தேர்வு நடைபெற்று வருகிறது. 

கடலூரில் தனியார் மகளிர் கல்லூரி கழிவறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் சின்னபாபு சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகலிங்கம். இவரது மகள் தனலட்சுமி (19). இவர் கடலூர் செம் மண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கல்லூரியில் தேர்வு நடைபெற்று வருகிறது. 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவி கல்லூரியில் உள்ள கழிவறைக்கு சென்று துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்து அலறினர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனையடுத்து, தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பேக்கை சோதனையிட்டனர். அதில், கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில் தேர்வில் தோல்வி அடைந்து விடுவேன் என்று பயம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!