கடலூரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கொள்ளையடிக்க சென்றவர்கள் போலீஸ் மற்றும் சுத்திகரிப்பு நிலைய காவலாளி மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கொள்ளையடிக்க சென்றவர்கள் போலீஸ் மற்றும் சுத்திகரிப்பு நிலைய காவலாளி மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில் சுமார் 2800 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட எண்ணெய் ஆலை, பாதியிலேயே மூடப்பட்ட நிலையில், அங்கு தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், இங்கு கொள்ளை அடிப்பதற்காக 20 பேர் கொண்ட கும்பல் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்போது, கொள்ளை அடிக்க வந்த கொள்ளையர்களை போலீசார் மற்றும் தொழிற்சாலை காவலர்கள் பிடிக்க முயன்ற போது 6 பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
இதில் 3 பெட்ரோல் குண்டுகள் மட்டுமே வெடித்த நிலையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வெடிக்காத பெட்ரோல் குண்டுகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.