கணவன் வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் காதல் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். வேறு வீடு பார்த்து அழைத்து செல்வதாக கணவன் கூறியும் அவ்வாறு செய்யாததால் சண்டையிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் காதல் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். வேறு வீடு பார்த்து அழைத்து செல்வதாக கணவன் கூறியும் அவ்வாறு செய்யாததால் சண்டையிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம்
கடலூர் மாவட்டம் நத்தவெளியை சேர்ந்த எம்.எஸ்.சி. பட்டதாரி பெண் ரம்யா(27). தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்தார். ரம்யாவும் அரிசிபெரியாங்குப்பம் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களுக்கு பெற்றோர் சம்மதத்துடன் ஏப்ரல் மாதம் 6ம் தேதி திருமணம் நடைபெற்றது. கார்த்திகேயன் வீட்டில் கழிவறை இல்லாததால் ரம்யா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
கழிப்பறை வசதி
இந்நிலையில், கழிவறை உள்ள வீட்டை பார்த்து குடியமர்த்தும் படி கார்த்திகேயனிடம் ரம்யா வலியுறுத்தியுள்ளார். ஆனால், கார்த்திகேயன் இதுதொடர்பாக எந்த முயற்சியும் எடுக்காததால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், மனமுடைந்த ரம்யா கடந்த 6ம் தேதி வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு கடலூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து, மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ரம்யா உயிரிழந்தார்.
தற்கொலை
இதுகுறித்து காவல் நிலையத்தில் ரம்யாவின் தாய் மஞ்சுளா புகார் அளித்ததையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரம்யாவுக்கு திருமணமாகி ஒரு மாதமே காலம் மட்டும் ஆவதால் விசாரணை ஆர்டிஓ பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.