செருப்பை காட்டிய கல்லூரி மாணவியின் மீது ஆசிட் வீச்சு... சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு..!

Published : Sep 10, 2019, 11:16 AM IST
செருப்பை காட்டிய கல்லூரி மாணவியின் மீது ஆசிட் வீச்சு... சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு..!

சுருக்கம்

காதல் விவகாரத்தில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவி மீது இளைஞன் ஒருவன் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் விவகாரத்தில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவி மீது இளைஞன் ஒருவன் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உடற்கல்வி பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்துவரும் மாணவி ஒருவரை, குத்தாலத்தைச் சேர்ந்த முத்தமிழன் என்பவன் பள்ளியில் படித்தபோதே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவி வேறொரு மாணவருடன் பழகி வந்த‌தால், இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட மாணவி முத்தமிழனை விட்டு விலகியதாக கூறப்படுகிறது. 

மேலும், அவனுடைய போக்கு பிடிக்காமல் மாணவி தொடர்பை தவிர்த்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த முத்தமிழன் 2 நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பல்கலை கழக விருந்தினர் மாளிகை அருகே நேற்று மாணவி நடந்து வந்த போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த மாணவி செருப்பை காட்டி அவனை எச்சரித்துள்ளார்.

 

இந்நிலையில், ஆத்திரமடைந்த முத்தமிழன் கழிப்பறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஆசிட்டை மாணவி சுசித்ரா மீது வீசியுள்ளான். இதில், அந்த மாணவி  முகம் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் துடித்தார். இதனையடுத்து, ஆசிட் வீசிய மாணவர் முத்தமிழனை பிடித்து சக மாணவர்கள் அடித்து உதைத்ததில் அவரும் படுகாயமடைந்தார். படுகாயம் அடைந்த இருவருக்கும் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

ஓயாத அடை மழை! வீட்டின் சுவர் இடிந்தது! பறிபோன தாய் மகள் உயிர்! கண் கலங்கிய அமைச்சர்!
தேர்தல் முன்விரோத தகராறு கொ* வழக்கு: 9 பேரின் வாழ்க்கையை மாற்றிய தீர்ப்பு! கதறும் குடும்பம்!