கடலூரில் ஷாக்கிங் நியூஸ்.. சட்டை பாக்கெட்டில் உள்ள செல்போன் வெடித்து விபத்து.. 3 பேரின் நிலை என்ன?

By vinoth kumarFirst Published Mar 28, 2024, 8:53 AM IST
Highlights

இரவு நேரத்தில் செல்போன்களை பயன்படுத்திவிட்டு உறங்கும் போது படுக்கையில் சார்ஜ் போட்டுவிட்டு உறங்குவது பலருக்கும் வழக்கம். இதனால், செல்போன் வெடித்து விபத்து ஏற்படுகிறது. 

கடலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரின் சட்டைப் பையில் இருந்த செல்போன் வெடித்து சிதறிய விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இரவு நேரத்தில் செல்போன்களை பயன்படுத்திவிட்டு உறங்கும் போது படுக்கையில் சார்ஜ் போட்டுவிட்டு உறங்குவது பலருக்கும் வழக்கம். இதனால், செல்போன் வெடித்து விபத்து ஏற்படுகிறது. அதேபோல் ஜார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பேசும் போது வெடித்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சட்டை பையில் இருந்த செல்போன் வெடித்து 3 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Erode GaneshaMoorthy: திமுக டூ மதிமுக.. யார் இந்த கணேசமூர்த்தி? வைகோவுக்காக இவ்வளவு செய்து இருக்காரா?

கடலூர் மாவட்டம் கண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ். இவர் சோதனை பாளையம் பகுதியில் நடைபெற இருந்த சுப நிகழ்ச்சிக்கு தனது தாய் மற்றும் பாட்டியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியது. இதனால், இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதையும் படிங்க: எங்க அப்பா பெயரிலேயே 5 பேரை வேட்பாளராக நிறுத்துறாங்க.. இபிஎஸ் முகத்தில் கரியை மக்கள் பூசுவார்கள்.. ஜெயபிரதீப்

செல்போன் வெடித்ததில் புஷ்பராஜிக்கு லேசான காயம் ஏற்பட்டாலும் இருசக்கர வாகன விபத்தில் சென்ற புஷ்பராஜ், தாய், பாட்டி ஆகியோர் 3 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த விபத்து தொடர்பாக போலீஸார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கடும் வெயில் காரணமாக செல்போன் வெடித்து சிதறி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!