கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கிவீசப்பட்ட தந்தை, மகள்... ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்..!

By vinoth kumar  |  First Published Dec 7, 2019, 3:31 PM IST

கடலூர் அருகே இன்று காலை இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தந்தை, மகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.


கடலூர் அருகே இன்று காலை இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தந்தை, மகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 

Tap to resize

Latest Videos

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆயர்மடத் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (40). இவரது மகள் திவ்ய ப்ரியா (19). இவர் திருச்சியில் தேர்வு எழுதவற்காக தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பேருந்து நிலையத்திற்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனம் வேப்பூர் அருகே சென்றிருக்கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த லாரி இவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. 

இந்த விபத்தில் தந்தை, மகள் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனர். 

click me!