கடலூரில் பயங்கரம்.. சாராயம் குடித்த 3 பள்ளி மாணவர்கள் கவலைக்கிடம்..!

By vinoth kumar  |  First Published Jun 4, 2021, 4:51 PM IST

கடலூரில் சாராயம் குடித்த பள்ளி மாணவர்கள் 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 


கடலூரில் சாராயம் குடித்த பள்ளி மாணவர்கள் 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த குள்ளஞ்சாவடி அருகே உள்ள புலியூர் காலனியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், அங்குள்ள வயல்வெளியில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். பின்னர் கரும்பு தோட்டம் வழியாக வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, கரும்பு தோட்டத்தில் சாராய ஊறல் போடப்பட்டிருந்ததை கண்டு 3 பேரும் சாராயம் குடித்துள்ளனர். இதனையடுத்து, திடீரென அடுத்தடுத்து பள்ளி மாணவர்கள் 3 பேரும் மயங்கி விழுந்தனர். 

Tap to resize

Latest Videos

undefined


 
இதனையடுத்து, உடனே அப்பகுதி மக்கள் மீட்டு 3 பேரையும் குள்ளஞ்சாவடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து 3 பேரும் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குள்ளஞ்சாவடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மற்ற 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதனிடையே சட்டவிரோதமாகவும் ஊரடங்கினை மீறியும், சாராயம் காய்ச்சிய சாராய வியாபாரி பூபாலனை கைது செய்துள்ளனர். 

click me!