விஏஒ அலுவலகத்தில் அதிர்ச்சி சம்பவம்.. சாதியை சொல்லி, காலில் விழ வைத்த காட்சிகள் வைரல்..!

By vinoth kumarFirst Published Aug 7, 2021, 12:18 PM IST
Highlights

கோவை ஓட்டர்பாளையம் கிராமத்தில் விஏஓ அலுவலகத்தில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த உதவியாளரை வேறு ஒரு சமூக நபர் காலில் விழ வைத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 

கோவை ஓட்டர்பாளையம் கிராமத்தில் விஏஓ அலுவலகத்தில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த உதவியாளரை வேறு ஒரு சமூக நபர் காலில் விழ வைத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த ஒட்டர்பாளையம் கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக  கலைச்செல்வி என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு உதவியாளராக அதே ஊரை சேர்ந்த முத்துசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று அதே  ஊராட்சிக்குட்பட்ட கோப்ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த கோபால்சாமி என்பவர் தன்னுடைய சொத்து விவரங்களை சரிபார்ப்பதற்காக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

அப்போது பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, ஆன் லைனில் விண்ணப்பித்து வர வேண்டும் என கூறிய நிலையில் கிராம நிர்வாக அலுவலருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.இதனையடுத்து, கோபால்சாமி முத்துசாமியின் சாதியை சொல்லியும், ஊரில் இருக்க முடியாது என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், முத்துசாமி, கோபால்சாமியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சிகளும், காலில் விழுந்த முத்துசாமியை மன்னித்துவிட்டேன் எழுந்திரு என  கோபால்சாமி சொல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

தாழ்த்தபடுத்தபட்ட சமூகத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரை அரசு அலுவலகத்திலேயே காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!