விரைவில் திமுகவில் இணைய உள்ள 3000 அதிமுகவினர்… கோவை செல்வராஜ் பரபரப்பு தகவல்!!

Published : Dec 19, 2022, 11:53 PM IST
விரைவில் திமுகவில் இணைய உள்ள 3000 அதிமுகவினர்… கோவை செல்வராஜ் பரபரப்பு தகவல்!!

சுருக்கம்

3 ஆயிரம் அதிமுகவினர் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். 

3 ஆயிரம் அதிமுகவினர் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.  இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முந்தைய அதிமுக ஆட்சியில் நடைபெற்ற எல்.இ.டி பல்பு, கோவை குளங்கள் தூர்வாரும் பணி உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் தொடர்பாக தன்னிடம் ஆதாரங்கள் இருக்கிறது. அடுத்த வாரம் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் நேரில் ஒப்படைக்க இருக்கிறோம். கோவை மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் உட்பட 3 ஆயிரம் அதிமுகவினர் விரைவில் முதலமைச்சர் தலைமையில் திமுகவில் இணைவார்கள்.

இதையும் படிங்க: போதை ஒழிப்பு மையத்தில் வைக்கப்பட்ட தொலைக்காட்சி… சிகிச்சைக்கு வருபவர்களின் மன இறுக்கத்தை புதுவழி!!

கோடநாடு கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதலில் மத்திய அரசிடம் பேசி தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நிதிகளை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜகவிற்கு தமிழகத்தில் வருங்காலம் இல்லை. ஓபிஎஸ் உடன் தாம் உண்மையாக இருந்த போதும் அவர் அவ்வாறு இல்லை.

இதையும் படிங்க: ஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி.. அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு !!

இப்போது அவர் குறித்து விமர்சிக்க எதுவும் இல்லை. முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சாலைகள் சேதமானது குறித்து அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் தற்போதைய தமிழக அரசு மீது அரசியல் காரணங்களுக்காக குற்றம் சாட்டி வருகிறார். அன்னூர் டிட்கோ விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கில் சுமார் 25 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதை தடுக்கும் வகையில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.  

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Coimbatore Top 5 Tourist Places: ஊட்டி, கொடைக்கானல் கூட்ட நெரிசலால் கவலையா? கோவையில் குளு குளுவென சுற்றிப்பார்க்க 5 சூப்பர் இடங்கள் இதோ!
ஊட்டியை விடுங்க.. கோவையில் கட்டாயம் பார்க்க வேண்டிய குளு குளுவென இருக்கும் 10 இடங்கள்!