வகுப்பறையில் துடிதுடித்து மயங்கிய 16 வயது மாணவி..! திடீர் மரணத்தால் அதிர்ச்சியில் உறைந்த பள்ளி..!

Published : Feb 17, 2020, 05:04 PM IST
வகுப்பறையில் துடிதுடித்து மயங்கிய 16 வயது மாணவி..! திடீர் மரணத்தால் அதிர்ச்சியில் உறைந்த பள்ளி..!

சுருக்கம்

தனக்கு படிப்பு சரியாக வராததை எண்ணியும், தன்னால் பெற்றோர் வருத்தமடைவதையும் எண்ணி பார்கவி மனவேதனையில் இருந்திருக்கிறார். வாழ்வில் விரகத்தியடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறார்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே இருக்கிறது கரிய கவுண்டனூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். டெய்லர் தொழில் பார்த்து வருகிறார். இவரது மகள் பார்கவி. 16 வயது சிறுமியான இவர் அங்கிருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார். பார்கவி சரியாக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரை கண்டித்த பெற்றோர், வீட்டின் சூழ்நிலை கருதி நன்றாக படிக்குமாறு கூறியுள்ளனர்.

தனக்கு படிப்பு சரியாக வராததை எண்ணியும், தன்னால் பெற்றோர் வருத்தமடைவதையும் எண்ணி பார்கவி மனவேதனையில் இருந்திருக்கிறார். வாழ்வில் விரகத்தியடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறார். அதன்படி சம்பவத்தன்று வழக்கம்போல பள்ளிக்கு கிளம்பிய அவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்திருக்கிறார். பின் பள்ளிக்கு சென்று சக மாணவிகளுடன் வகுப்பறையில் அமர்ந்துள்ளார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்ததை கண்டு வகுப்பறையில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியடைந்தனர்.

ஆசிரியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தபோது தான் பார்கவி பூச்சி மருந்தை குடித்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாணவி கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவலர்கள் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

டிக் டாக்கால் சீரழிந்த குடும்பம்..! மனைவியின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு கொன்ற கொடூர கணவன்..!

PREV
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?