மஹாசிவராத்திரியையொட்டி ஈஷாவில் நடந்துவரும் ‘யக்ஷா’ கலை திருவிழாவின் 2-ம் நாளான நேற்று (மார்ச் 3) புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் தங்களின் இன்னிசையால் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
மஹாசிவராத்திரியையொட்டி ஈஷாவில் நடந்துவரும் ‘யக்ஷா’ கலை திருவிழாவின் 2-ம் நாளான நேற்று (மார்ச் 3) புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் தங்களின் இன்னிசையால் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
சர்வதேச அளவில் அறியப்படும் வயலின் மாஸ்ட்ரோ டாக்டர். மைசூர் மஞ்சுநாத் அவர்களின் மகன் திரு.சுமந்த் மஞ்சுநாத்தன் இனிய வயலின் இசையால் மக்களின் மனங்களை தன்வசப்படுத்தினார். 10 வயது முதல் வயலின் இசைக்க தொடங்கிய அவர் இந்திய தூதரகத்தின் சார்பில் அபுதாபியில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு கலைநிகழ்ச்சியில் வயலின் இசைத்த பெருமைக்குரியவர். அவருடன் 6 வயதில் இருந்து புல்லாங்குழல் வாசிக்கும் இசைகலைஞர் திரு.ரிஷிகேஷ்மஜூம் தாரும் இணைந்து மெல்லிசையால் சிறந்த இசை விருந்து படைத்தனர்.
அவர்களுடன், இசைகருவிகளில் கைதேர்ந்த திரு. ஜெயந்திரராவ் அவர்கள் மிருதங்கமும், திரு.ராஜேந்திரநாகோட் தபேலாவும், திரு.வாழப்பள்ளி கிருஷ்ணகுமார் கடமும் வாசித்து பார்வையாளர்களைபரவசப்படுத்தினர். இந்த இசைக்கலைஞர்கள் அனைவரும் இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, கனடா, துபாய் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் தங்கள் இசை நிகழ்ச்சிகளை நடத்திவரும் சிறப்பு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யக்ஷா திருவிழாவின் நிறைவுநாளான நாளை (மார்ச் 4) புன்யா டான்ஸ் கம்பெனியின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதைதொடர்ந்து மார்ச் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் தினமும் மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது.