கொரோனா பாதிப்பு திடீர் அதிகரிப்பு... தமிழகத்தில் இந்த பகுதிக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம்..!

By vinoth kumarFirst Published Oct 7, 2020, 2:32 PM IST
Highlights

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வால்பாறை செல்ல இ-பாஸ் அவசியம் என கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வால்பாறை செல்ல இ-பாஸ் அவசியம் என கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொரேனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 2-வது வாரத்திற்குப் பிறகு சற்று தளர்வு அளிக்கப்பட்டது. அதன்பின் செப்டம்பர் 1-ம் தேதியில் இருந்து இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது.

ஆனால் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா இடங்களுக்கு மட்டும் இ-பாஸ் கடைபிடிக்கப்பட்டது. அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் இ-பாஸ் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது. பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கான இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களில் மக்கள் குவிய துவங்கினர். வால்பாறையிலும் மக்கள் அதிகளவில் வரத்துதொடங்கினர்.

இதனிடையே வால்பாறை பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனையடுத்து வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வால்பாறை செல்வதற்கு இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

click me!