கோவையில் இன்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா.. மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்

By karthikeyan VFirst Published Apr 10, 2020, 7:48 PM IST
Highlights

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், கோவை மாவட்டத்தில் மட்டும் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட வாரியாக பாதிப்பு எண்ணிக்கையை பார்ப்போம்.
 

இந்தியாவில் 6800க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 7000ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. இந்தியாவில் மகாராஷ்டிராவிலும், அதற்கடுத்தபடியாக தமிழ்நாட்டிலும் தான் பாதிப்பு மிக மோசமாக உள்ளது.  

மகாராஷ்டிராவில் 1380 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் 911 பேருக்கு இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக டெல்லி, உத்தர பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கொரோனா தீவிரமாக உள்ளது. 

தமிழ்நாட்டில் இன்று 77 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 26 கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 12 பேர் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 172 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் பாதிப்பு எண்ணிக்கை 86ஆக அதிகரித்துள்ளது. 

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

சென்னை - 172

கோவை -  86

ஈரோடு - 60

திருநெல்வேலி - 56

திண்டுக்கல் - 54

நாமக்கல் - 41

தேனி, செங்கல்பட்டு - 40

திருச்சி, ராணிப்பேட்டை - 36

திருப்பூர் - 26

மதுரை - 25

தூத்துக்குடி - 24

கரூர், விழுப்புரம் - 23

திருப்பத்தூர் - 16

கன்னியாகுமரி - 15

சேலம், கடலூர் - 14

திருவள்ளூர், திருவாரூர் - 13

நாகப்பட்டினம் - 12

விருதுநகர், தஞ்சாவூர், வேலூர் - 11

திருவண்ணாமலை - 10

நீலகிரி - 7

சிவகங்கை, காஞ்சிபுரம் - 6

தென்காசி, கள்ளக்குறிச்சி - 3

ராமநாதபுரம் - 2

பெரம்பலூர், அரியலூர் - 1.
 

click me!