கஞ்சா விற்று கைதான சூர்யா - தமன்னா... போலீசில் கையும் களவுமாக சிக்கிய காதல் ஜோடி...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 17, 2021, 03:15 PM IST
கஞ்சா விற்று கைதான சூர்யா - தமன்னா... போலீசில் கையும் களவுமாக சிக்கிய காதல் ஜோடி...!

சுருக்கம்

கோவையில் சூர்யா, தமன்னா என பெயரை மாற்றி வைத்துக் கொண்டு கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா விற்று வந்த காதல் ஜோடி கையும் களவுமாக சிக்கியுள்ளது. 

கோவை காந்தி நகரைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ்  (21), கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்ட இவருக்கும், கோவையில் நர்சிங் படித்து வந்த விருதுநகரைச் சேர்ந்த வினோதினி என்பவருக்கும் இடையே உருவான நட்பு நாளாடைவில் காதலாக மாறியுள்ளது. படிப்பு முடிந்த பிறகும் சொந்த ஊருக்கு திரும்ப மனமில்லாத வினோதினி காதலர்  சூரிய பிரகாஷ் உடன் கோவையிலேயே வீடு எடுத்து தங்கியுள்ளார். 

இதனால் இருவருடைய செலவிற்கு நிறைய பணம் தேவைப்பட்டுள்ளது. இருவருக்கும் வேலை இல்லாததால் பணத்திற்காக கஞ்சா வாங்கி விற்கலாம் என முடிவு செய்துள்ளனர். கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்க ஆரம்பித்த இருவரும் தங்களுடைய உண்மையான பெயர் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக பெயரை மாற்றிக் கொண்டுள்ளனர். நண்பர்கள் தன்னை சூர்யா என அழைத்து வந்ததால் சூரிய பிரகாஷ் அனைவரிடமும் தன்னுடைய பெயரை சூர்யா என கூறி வந்துள்ளார். அதேபோல் வினோதினியும் தன்னுடைய பெயரை தமன்னா என மாற்றிக்கொண்டுள்ளார். 

இருவரும் கோவையில் சூர்யா, தமன்னா என்ற பெயரில் ஜோராக கஞ்சா வியாபாரம் செய்து வந்துள்ளனர். கோவை பீளமேடு அருகேயுள்ள நேரு நகர் வீரியம்பாளையம் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது இவர்கள் இருவரும் வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் சோதனை செய்த போது, அவர்களிடம் இருந்து இரண்டே கால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உடனடியாக சூர்யா என்கிற சூரிய பிரகாஷையும், தமன்னா என்கிற வினோதினியையும் போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!
காரில் திமுக கொடியுடன்.. ஃபுல் மப்பில் போயி யாரையாவது சாக அடிக்கவா? இப்படி பேசிட்டு கேஸ் போடாத போலீஸ்