சூப்பர் நியூஸ்..! கொரோனாவை ஒழித்துக்கட்டி கெத்து காட்டும் கோவை..!

By Manikandan S R SFirst Published May 14, 2020, 8:50 AM IST
Highlights

மருத்துவர்களின் சிகிச்சைகள் மூலம் மெல்ல மெல்ல குணமடைந்து 144 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்பின் ஒரே ஒரு கர்ப்பிணி பெண் மட்டும் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு குழந்தை பிறந்த நிலையில் குழந்தைக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அக்குழந்தைக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சைகள் மூலம் அப்பெண்ணும் நலமடைந்து நேற்று வீடு திரும்பினார். 

இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொடிய வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுரவேகம் எடுத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தினமும் 500ஐ கடந்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,227 ஆக உயர்ந்திருக்கிறது.

இன்றைய நிலவரப்படி 2,176 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,262 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று வெளியான அறிவிப்பின்படி கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் நீங்கியுள்ளது. கோவையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு 146 பேர் சிகிச்சையில் இருந்தனர். அவர்களில் ஒருவர் நோயின் தீவிரத்தால் மரணமடைந்தார்.

மருத்துவர்களின் சிகிச்சைகள் மூலம் மெல்ல மெல்ல குணமடைந்து 144 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்பின் ஒரே ஒரு கர்ப்பிணி பெண் மட்டும் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு குழந்தை பிறந்த நிலையில் குழந்தைக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அக்குழந்தைக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சைகள் மூலம் அப்பெண்ணும் நலமடைந்து நேற்று வீடு திரும்பினார். கடந்த 3ம் தேதிக்கு பிறகு கோவை மாவட்டத்தில் புதிய நோய்த்தொற்று கண்டறியப்படவில்லை. இதன்மூலம் கொரோனா இல்லாத மாவட்டமாக கோவை தற்போது மாறியுள்ளது. முன்னதாக ஈரோடு, சிவகங்கை, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் கொரோனாவில் இருந்து விடுப்பட்டிருந்தது. அந்த வரிசையில் 4வது மாவட்டமாக கோவையும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!