வெறித்தனமான வேட்டையாடும் கொரோனா... முதல்முறையாக 28 வயது இளைஞர் உயிரிழப்பு..!

By vinoth kumarFirst Published Jun 15, 2020, 11:02 AM IST
Highlights

கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல், மூச்சுத்திணறலுடன் அனுமதிக்கப்பட்ட 28 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல், மூச்சுத்திணறலுடன் அனுமதிக்கப்பட்ட 28 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா கட்டுக்கடங்காத வேகத்தில் சென்றுக்கொண்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்த பல்வே நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் நாளுக்கு நாள் பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் இதுவரை 44,661 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 435 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதில், அதிகபட்சமாக சென்னையில் 31,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் 28 வயது வாலிபர் ஒருவர் மேலாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு திடீரென சளி, காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து கோவை வந்த அவர், சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, நேற்று அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது கடும் காய்ச்சல், மூச்சுத்திணறல் அதிகமானது. இதனால் சிகிச்சைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டாவதாக எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே கொரோனா தொற்றால் உயிரிழந்தாரா என்பதை உறுதிப்படுத்தி இயலும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை கோயம்புத்தூரில் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!