எடப்பாடி சொன்னா கேளுங்க... இப்போ சாப்பாடு கொடுத்த பெரியவருக்கு கொரோனா அட்டாக்..!

By vinoth kumarFirst Published Apr 14, 2020, 1:37 PM IST
Highlights

கோவை வடமதுரை கோத்தாரி லே அவுட் பகுதியை சேர்ந்த 61 வயது தன்னார்வலர் ஒருவர் கடந்த ஒரு வாரமாக துடியலூர் காவல் துறையினருக்கு உணவு விநியோகம் செய்து வந்துள்ளார். மேலும் துடியலூர் காவல்துறையுடன் இணைந்து போக்குவரத்து சீரமைப்பது உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நேற்று அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவையில் காவல்துறையினருக்கு உணவு வழங்கி வந்த 61 வயது தன்னார்வலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அவர் வழங்கிய உணவை சாப்பிட்ட காவலர்கள் 40 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 

கோவை வடமதுரை கோத்தாரி லே அவுட் பகுதியை சேர்ந்த 61 வயது தன்னார்வலர் ஒருவர் கடந்த ஒரு வாரமாக துடியலூர் காவல் துறையினருக்கு உணவு விநியோகம் செய்து வந்துள்ளார். மேலும் துடியலூர் காவல்துறையுடன் இணைந்து போக்குவரத்து சீரமைப்பது உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நேற்று அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அவர் வசித்த பகுதியை பெரிய நாயக்கன்பாளையம் வட்டார சுகாதார அதிகாரிகள் சீல் வைத்தனர். பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே நடமாடக்கூடாது என எச்சரித்துள்ளனர். மேலும்,  ஒரு வாரமாக துடியலூர் காவல் துறையினருக்கு உணவு அளித்து வந்த நிலையத்தில், தற்போது அந்த காவல் நிலையத்தில் பணியில் இருக்கும் 40 காவலர்களுக்கும் இன்று காலை முதல் கொரொனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்  கடந்த மார்ச் 23ம் தேதி இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்துள்ளார். அவருக்கு இரு முறை சோதனை செய்யப்பட்ட போது நெகட்டிவ் என வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் அவருக்கு காய்ச்சல் ஏற்படவே அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில் அவருக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டதாக கூறியுள்ளனர். இப்படி ஒரு சூழ்நிலை வரக்கூடாது என்பதால் தான் முதல்வர் எடப்பாடி ஊரடங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க தன்னார்வலர்கள் மற்றும் அரசியில் கட்சியினருக்கு தடை விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!