கோவை மாணவி தற்கொலை வழக்கு.. கடிதத்தில் குறிப்பிட்ட 2 பேர் சிக்கினர்.. பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலம்.!

By vinoth kumar  |  First Published Dec 2, 2021, 7:58 AM IST

மாணவி எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியது. அதில், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, எலிசா சாருவோட அப்பா, ரீத்தாவோட தாத்தா உள்பட யாரையும் சும்மா விடக்கூடாது கூறப்பட்டிருந்தது. மாணவி தற்கொலை தொடர்பாக போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் இயற்பியல் ஆசிரியர் மிதுன்சக்கரவர்த்தி (31) மற்றும் புகார் கொடுத்தும் அலட்சியமாக செயல்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டனர்.


கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்த மாணவிக்கு, மேலும் இருவர் பாலியல் தொல்லை அளித்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த மகுடேஸ்வரனின் மகள் பொன் தாரணி(17) ஆர்.எஸ். புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக 2 மாதங்களுக்கு முன்பு  மாநகராட்சி பள்ளியில் சேர்ந்தார். அப்படி இருந்த போதிலும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததன் காரணாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Tap to resize

Latest Videos

இது தொடர்பாக மாணவி எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியது. அதில், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, எலிசா சாருவோட அப்பா, ரீத்தாவோட தாத்தா உள்பட யாரையும் சும்மா விடக்கூடாது கூறப்பட்டிருந்தது. மாணவி தற்கொலை தொடர்பாக போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் இயற்பியல் ஆசிரியர் மிதுன்சக்கரவர்த்தி (31) மற்றும் புகார் கொடுத்தும் அலட்சியமாக செயல்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டனர்.

மேலும், அந்த கடிதத்தில் இரு மாணவிகளுடைய உறவினர்களின் பெயர்கள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இரு மாணவிகளின் உறவினர்கள் யார்? எதற்காக அவர்களது பெயரை மாணவி குறிப்பிட்டுள்ளார், அவர்களுக்கும் இந்த மாணவிக்கும் என்ன தொடர்பு என்ற அடிப்படையில் போலீசார் விசாரித்தனர். மற்றொரு புறம் இக்கடிதத்தில் உள்ள கையெழுத்து உயிரிழந்த மாணவியுடையதா என்பதை கண்டறிய, அவரது பாட புத்தகங்களை கைப்பற்றி, ஒப்பீட்டுக்காக சென்னையில் உள்ள தடய அறிவியல் துறைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், உயிரிழந்த மாணவி கடிதத்தில் குறிப்பிட்டிருந்த பெயர்களையுடைய, இரு சக மாணவிகளின் உறவினர்கள் ஆர்.எஸ்.புரத்தில் வசித்து வந்தது தெரிந்தது.

இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, அவருக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு, பாலியல் தொல்லை அளித்தீர்களா என்பது குறித்து கேட்டு விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், மேற்கண்ட இருவரும் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக இவர்களிடம் விசாரித்து வரும் போலீசார், கடிதத்தை எழுதியது மாணவி தான் என்பதை உறுதி செய்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

click me!