சந்தேகம் எழுப்பிய தாய்... கோவை 6 வயது சிறுமி கொலையில் திடீர் திருப்பம்..!

By vinoth kumarFirst Published Dec 27, 2019, 5:29 PM IST
Highlights

கோவை 6 வயது சிறுமியை மேலும் ஒருவர் வன்கொடுமை செய்தது டிஎன்ஏ சோதனையில் அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக தாய் தொடர்ந்த வழக்கில் மறு விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை 6 வயது சிறுமியை மேலும் ஒருவர் வன்கொடுமை செய்தது டிஎன்ஏ சோதனையில் அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக தாய் தொடர்ந்த வழக்கில் மறு விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை அடுத்த பன்னிமடை கஸ்தூரி நாயக்கன்புதூரில் கடந்த மார்ச் 25-ம் தேதி 6 வயது சிறுமி துணியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமான முறையில் வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு தரப்பினரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில், இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இதுதொடர்பான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாக டிஎன்ஏ சோதனையில் தெரிவந்துள்ளதாக சிறுமியின் தாய் வனிதா நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

இந்நிலையில், தாயின் கோரிக்கை ஏற்ற நீதிபதி மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் விரைவில் மற்றொரு குற்றவாளி கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

சிறுமியின் தாய் பேட்டி;- 

நீதிபதியின் தீர்ப்பு குறித்து சிறுமியின் தாயிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, பதிலளித்த அவர் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு நன்றி. இது போன்று எந்த குழந்தைக்கும் நடக்கக்கூடாது கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகள் இது போன்று எங்கு பாதிக்கப்பட்டாலும் நான் அங்கு சென்று போராடுவேன் என கூறினார்.

click me!