வசமாக சிக்கிய பாலியல் வீடியோ கொடூரர்கள்... தமிழக அரசு அதிரடி..!

Published : Mar 12, 2019, 05:03 PM IST
வசமாக சிக்கிய பாலியல் வீடியோ கொடூரர்கள்... தமிழக அரசு அதிரடி..!

சுருக்கம்

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தின் வழக்கு சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. 

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தின் வழக்கு சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. 

பொள்ளாச்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பெண்களை மயக்கி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்துள்ளது. அதில், பாதிக்கப்பட்ட ஒரு பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, காவல்துறை நான்கு பேரை கைது செய்தது. இந்தநிலையில், இந்தக் கும்பல் இளம் பெண்களை சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்யும் ஓரிரு நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ வெளியானது. அந்த வீடியோ தமிழ்நாட்டைக் கொந்தளிக்கச் செய்தது.

இந்த வழக்கில் கைதான 4 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்த நிலையில் 3 பேரும் பொள்ளாச்சி ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 25-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். ஆபாச வீடியோ வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் திருநாவுக்கரசு கடந்த 5-ந் தேதி கைது செய்யப்பட்டார். திருநாவுக்கரசுவுக்கு ஜாமின் கேட்டு அவரது தாயார் லதா பொள்ளாச்சி ஜே.எம்.1., கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்று ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி போலீஸ் டி.ஜி.பி ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார். அங்கு எஸ்.பி அதிகார மட்டத்திலான ஒரு பெண் காவல் அதிகாரி தலைமையில் விசாரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் சில மணிநேரங்களில் சிபிஐக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!
காரில் திமுக கொடியுடன்.. ஃபுல் மப்பில் போயி யாரையாவது சாக அடிக்கவா? இப்படி பேசிட்டு கேஸ் போடாத போலீஸ்