Crime: கோவிலில் திருட முயன்ற வாலிபரை ஊர்கூடி அடித்து கொன்ற பொதுமக்கள் - கோவையில் பரபரப்பு

By Velmurugan sFirst Published Jun 7, 2024, 10:09 PM IST
Highlights

சூலூர் அருகே கோவிலில் திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள நடுப்பாளையம் பகுதியில் உள்ள மாகாளி அம்மன் கோவிலில் சம்பவத்தன்று இரவு சுற்றுசுவர் மீது ஏறி கோவிலுக்குள் சென்று வாலிபர் ஒருவர் திருட முயன்றுள்ளார். அப்போது அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதை கவனித்த வாலிபர், உஷாராகி கேமராக்களின் கேபிள் வயர்களை துண்டித்துள்ளார். 

உடனடியாக கோவிலில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு அலாரம் ஒலிக்க, ஊரில் உள்ள முக்கிய நபர்களின் செல்போன் எண்களுக்கு அபாய குறுந்தகவல் சென்றுள்ளது. இதையடுத்து ஊர் பொதுமக்கள் கோவில் முன்பாக திரண்டனர். அப்போது கோவிலினுள் மர்ம நபர் ஒருவர் கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி முயற்சி செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த நபரை பிடித்த ஊர் பொதுமக்கள் கோவில் மைதானத்தில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். 

Latest Videos

5 சவரன் நகைக்காக தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட மூதாட்டி; புதுக்கோட்டையில் பரபரப்பு

இதில் பலத்த காயம் அடைந்த அந்த நபர், ஒரு கட்டத்தில் மயங்கி கீழே சரிந்தார். பின்னர் அந்த நபரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் சூலூர் காவல் துறையினர் மருத்துவமனைக்கு சென்று விசாரணை செய்ததில் அவர், ஏற்கனவே கோவில் திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து பழைய குற்றப்பதிவேடுகளை ஆய்வு செய்ய போது கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த அம்பு சலீம் என்பவரது மகன் சபீர் என்ற 28 வயது இளைஞர் என்பதும், இவர் மீது ஏற்கனவே கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் திருடியது, கஞ்சா விற்பனை செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்கு நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது. 

மனைவியின் கல்வி கடனை அடைக்க வெளிநாடு சென்ற வாலிபர்; இன்ஸ்டா காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி - தென்காசியில் பரபரப்பு

ஊர் பொதுமக்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சபீர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். தொடர்ந்து சபீர் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், ஊர் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் நடுப்பாளையத்தைச் சேர்ந்த கனகராஜ், துரைமுருகன், பழனிவேல் ஆகிய 3 பேர் சபீரை தாக்கியது தெரிய வந்தது. இதனை அடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரை தேடி வருகின்றனர். கோவிலில் கொள்ளை அடிக்க முயன்ற நபரை ஊர் பொதுமக்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!