தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாட தேர்வாகா விரக்தியில் சென்னையைச் சேர்ந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கத்திப்பாரா பாலத்தில் இன்று பகல் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் பாலத்தின் மீது தனது வாகனத்தை நிறுத்திவிட்டு திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை சற்றும் எதிர்பாராத அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மவுண்ட் போக்குவரத்து காவல் துறையினர் தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் உடலை மீட்டு ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெரியார் மண் என்பதால் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு? - மக்களவையில் துரைவைகோ காட்டம்
மேலும் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தற்கொலை செய்துகொண்ட நபர் விருகம்பாக்கம் கிருஷ்ணா நகர் 6வது பிரதான சாலையைச் சேர்ந்த சாமுவேல்ராஜ் என்பது தெரியவந்தது. தொடர்ந்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இளைஞர் சாமுவேல்ராஜ் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
ஆக.1 முதல் 14 வரை தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில் சேவையில் மாற்றம்
கடந்த 2023, 2024ம் ஆண்டுகளில் சாமுவேல் ராஜ் டிஎன்பிஎல் தொடரில் தேர்வாவதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்ட வந்த நிலையில், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தேர்வாகதது அவருக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. விரக்தியில் இருந்த சாமுவேல் ராஜ் வழக்கம் போல் இன்றும் தனது மாணவர்களுக்கு காலை நேரத்தில் கிரிக்கெட் பயிற்சி அளித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பாலத்தில் இருந்து தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் கிரிக்கெட் வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.