அடையார் கேன்சர் மருத்துவமனைக்கு சிகிச்சை வந்த பெண்ணுக்கு கொரோனா... சீல் வைத்த சுகாதாரத்துறை...!

By vinoth kumarFirst Published May 2, 2020, 1:29 PM IST
Highlights

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த மேற்குவங்க மாநில பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த மேற்குவங்க மாநில பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, ஸ்ரீராம் நகர் பகுதி முழுவதுமாக அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 

சீனாவின் உருவான கொரோனா வைரஸ் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு மல்படுத்தப்பட்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனாலும், அதன் விரீயம் சற்றும் குறையாமல் இருந்து வருகிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,526 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மண்டல வாரியாக பார்க்கும் போது திரு.வி.க நகரில் 259 பேரும்,  ராயபுரத்தில் 216 பேரும், தேனாம்பேட்டையில் 132 பேரும், கோடம்பாக்கத்தில் 116 பேரும், தண்டையார்ப்பேட்டையில் 101 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சமூக பரவல் சென்னையில் தீவிரமடைந்து வருகிறது. 

இந்நிலையில், அடையாறில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் புற்றுநோய் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த மேற்கு வங்க மாநில பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று உறுதியான மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பெண் தங்கியிருந்த ஸ்ரீராம் நகர் பகுதி முழுவதுமாக சீல் வைக்கப்பட்டது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் சுகாாரத்துறை அதிகாரிகள் கேட்டறிந்து வருகின்றனர்.

click me!