தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட, சென்னையில் தான் தினம்தோறும் அதிக, மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, சென்னையில் மிகவும் கடுமையாக ஊரடங்கு உத்தரவு, கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட, சென்னையில் தான் தினம்தோறும் அதிக, மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, சென்னையில் மிகவும் கடுமையாக ஊரடங்கு உத்தரவு, கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நேற்றைய தினம், சென்னை மாநகராட்சி வெளியிட்ட தகவலில்... எவ்வித காரணமும் இன்றி, சென்னை சாலைகளில் சுற்றி திரிபவர்கள் 14 நாள் தனிமை படுத்தப்படுவார்கள் என்றும், ரூபாய் 100 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.
undefined
இந்நிலையில், தற்போது... 50 க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள், சென்னை பல்லாவரத்தில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கு காரணமாக, அணைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால், வடமாநில தொழிலாளர்கள் பலர், தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்பமுடியாமல் தவித்து வருகிறார்கள். ஒரு சிலர் குடும்பத்துடன், பல கிலோமீட்டர் நடந்தே செல்லும் அவலமும் ஏற்பட்டுள்ளது.
இப்படி, பல்வேறு இடங்களில் சிக்கிக்கொண்டுள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு அரசு சார்பில், உணவு போன்றவை வழங்கப்பட்டாலும், பலர் தங்க இடம் மின்றி, அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் தற்போது தங்களுடைய சொந்த ஊர்களுக்கு தங்களை அனுப்பிவிடுமாறு போலீசாரின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் குதித்தனர்.
மேலும் திடீர் என ஏராளமானோர் ஒரே இடத்தில் குவிந்ததால் பல்லாவரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இப்படி கூடிய, வடமாநில தொழிலாளர்கள் அனைவரும், தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தனர்.
ஏற்கனவே சென்னையில், கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் நிலையில், ஒரே இடத்தில் வடமாநில தொழிலாளர்கள் ஒன்று கூடி, போராட்டம் நடத்தி வருவதால், கொரோனா அதிகரிக்கும் வாய்ப்பும் ஏற்படுத்தியுள்ளது.