டயர்களுக்கு கடும் தட்டுப்பாடா? தீபாவளி சிறப்பு பேருந்து சேவை பாதிக்கப்படுமா? போக்குவரத்துத்துறை விளக்கம்.!

By vinoth kumarFirst Published Oct 27, 2021, 7:28 PM IST
Highlights

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டயர்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், இதனால் தீபாவளிக்குத் தடையில்லாப் பேருந்து சேவைகளை முழுமையாக வழங்க சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) மற்றும் பிற போக்குவரத்துக் கழகங்களால் இயலாத நிலை ஏற்படும்.

தீபாவளி பண்டிகையின் போது அனைத்து தடப் பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகளை சீராக இயக்க முடியும் என போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடுமையான டயர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. உடனடியாக டயர்கள் வாங்கப்படாவிட்டால், 40% பேருந்துகளை தீபாவளிக்கு இயக்க முடியாது என்று கூறப்படுகிறது. இது உண்மையானால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். போதிய டயர்கள் இல்லாததால் அரசுப் பேருந்துகளில் ரீ-ட்ரெட் செய்யப்பட்ட டயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு தேய்ந்து விபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. நிர்வாகத்தின் அலட்சியத்தால் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என அன்புமணி கூறியிருந்தார்.

இதையும் படிங்க;- சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது பற்றி ஓபிஎஸ் பேசியது சரிதான்.. அதகளப்படுத்தும் ஜே.சி.டி.பிரபாகர்..!

மேலும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 34,000 டயர்கள்  வாங்கப்படும் என்று கடந்த ஜூலை மாதமே அறிவிக்கப்பட்டது. ஆனால், 3 மாதங்களாகியும் இதுவரை வாங்கப்படாததே சிக்கலுக்குக் காரணம். உடனடியாக டயர்களை வாங்கி, பேருந்துகள் பாதுகாப்பாக இயக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி கோரிக்கை வைத்திருந்தார். 

இதையும் படிங்க;- நான் ஒரு சாதாரண விவசாயி.. அறிவாலயம் அமைச்சர்களைப் போல ஊழல் செய்யவில்லை.. திமுகவை பங்கம் செய்த அண்ணாமலை..!

இதுகுறித்து அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டயர்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், இதனால் தீபாவளிக்குத் தடையில்லாப் பேருந்து சேவைகளை முழுமையாக வழங்க சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) மற்றும் பிற போக்குவரத்துக் கழகங்களால் இயலாத நிலை ஏற்படும் என்றும் பல்வேறு ஊடகங்களில் உண்மை நிலையை உறுதிப்படுத்தாத செய்தி வெளியாகியுள்ளது.

புதிய டயர்கள் மற்றும் ரீட்ரெடிங் பொருட்களின் தற்போதைய இருப்பு நிலை, போக்குவரத்துக் கழகங்கள் அனைத்துப் பேருந்துகளையும் இயக்கத் தேவையான டயர் ஃப்ளோட்டை விட அதிகமாக இருப்பதால் தடையின்றிப் பேருந்துகளை இயக்க முடியும் எனப் போக்குவரத்துத் துறை, இதன் மூலம் தெரிவிக்கிறது. 15,997 புதிய டயர்கள் மே 2021 முதல் தற்போது வரை வாங்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க;- இன்னும் ஓபிஎஸ் எங்க ஆள்தான்.. ஒன்று சேரும் பழைய டீம்.. டிடிவி.தினகரன் அதிரடி பேட்டி..!

மேலும் 1,000 டயர்கள் போக்குவரத்துக் கழகங்களுக்கு இந்த வாரம் சென்றடையும் நிலையில் உள்ளன. இதனால் தற்போதைய நிலையில், எந்தத் தடங்கலும் இல்லாமல் தீபாவளி சிறப்புப் பேருந்துகளை இயக்க, போக்குவரத்துக் கழகங்கள் ஏதுவான நிலையில் இருப்பதை இது காட்டுகிறது. பழைய டயர்களை ரீட்ரெடிங் செய்ய டிரெட் ரப்பர், பிணைப்பு கோந்து, பிவிசி ஆகியவை போதுமான அளவு இருப்பில் உள்ளன.

இதையும் படிங்க;- 23 வயது இளைஞர் செய்யுற வேலையா இது.. ஆண்டிகள், இளம்பெண்கள் கரெக்ட் செய்து உல்லாசம்.. நிர்வாண வீடியோ..!

அரசு போக்குவரத்துக் கழகங்களிடம் அனைத்துப் பேருந்துகளையும் முழுமையாக இயக்கத் தேவையான டயர்கள் மற்றும் ரீட்ரெடிங் பொருட்கள் போதுமான அளவிற்கு இருப்பதால், தற்போதும் மற்றும் தீபாவளி பண்டிகையின்போதும் அனைத்துத் தடப் பேருந்துகள் மற்றும் சிறப்புப் பேருந்துகளை சீராக இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!