சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் 3ம் ஆண்டு பயின்று வரும் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, கல்லூரி மற்றும் விடுதியில் உள்ள 570 மாணவர்களுக்குத் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்து கல்லூரி மருத்துவமனையில் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1ம் தேதி முதல் செயல்பட்டு வருகின்றது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அப்படி இருந்த போதிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
undefined
இந்நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் 3ம் ஆண்டு பயின்று வரும் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, கல்லூரி மற்றும் விடுதியில் உள்ள 570 மாணவர்களுக்குத் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், மேலும் 12 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
மாணவர்கள் அனைவருமே விடுதியில் தங்கிப் படித்த மாணவர்கள் என்றும் அண்மையில் சொந்த ஊர் சென்று திரும்பிய 3ம் ஆண்டு மாணவர்கள் என்றும் கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் வேப்பேரி சித்தா கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.