கொரோனா பரிசோதனைகளை அதிகரியுங்கள்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு போட்ட சுகாதாரத்துறை செயலாளர்.!

By vinoth kumarFirst Published Sep 10, 2021, 5:42 PM IST
Highlights

மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பூசி போடுவதை திட்டமிட்டு துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நாளை மறுநாள் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்திருக்கும் நிலையில், அதிகம் பேர் பயன்பெறுவதை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 1,600ஐ நெருங்குவதால் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக அனைத்து ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அதில், மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பூசி போடுவதை திட்டமிட்டு துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நாளை மறுநாள் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்திருக்கும் நிலையில், அதிகம் பேர் பயன்பெறுவதை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்.  தொற்று கண்டறியப்படும் நபருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை நடத்த வேண்டும். 12ம் தேதி மெகா முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போடுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

click me!