கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் முதலிரவில் புதுமாப்பிள்ளை தற்கொலை.. கதறிய மனைவி.. அதிர வைக்கும் காரணம்?

Published : Sep 10, 2021, 01:23 PM IST
கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் முதலிரவில் புதுமாப்பிள்ளை தற்கொலை.. கதறிய மனைவி.. அதிர வைக்கும் காரணம்?

சுருக்கம்

இவர்களது முதலிரவு திருமுல்லைவாயலில் உள்ள நந்தினி வீட்டில் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் இரவு கார்த்திகேயன், நந்தினி இருவரும் படுக்கை அறைக்கு சென்றுள்ளனர். பின்னர், அவர்கள் இருவரும் நள்ளிரவு வரை பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

முதலிரவில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பாலன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (31). இவர் கதிர் அறுக்கும் வாகனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் கார்த்திகேயனுக்கும், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் எஸ்.வி.டி நகரில் வசிக்கும் அத்தை மகள் நந்தினி (24) என்பவருக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டது. நந்தினி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்களது திருமணம் செங்கல்பட்டு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவர்களது முதலிரவு திருமுல்லைவாயலில் உள்ள நந்தினி வீட்டில் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் இரவு கார்த்திகேயன், நந்தினி இருவரும் படுக்கை அறைக்கு சென்றுள்ளனர். பின்னர், அவர்கள் இருவரும் நள்ளிரவு வரை பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு, நந்தினி தூங்கியுள்ளார். பின்னர், நேற்று காலை நந்தினி எழுந்து பார்த்தபோது கார்த்திகேயன் படுக்கையறையில் புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறினார். 

இதனையடுத்து, திருமுல்லைவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  கார்த்திகேயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முதலிரவின் போது சரிவர தாம்பத்திய உறவில் ஈடுபட முடியவில்லை என்ற வருத்தத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் தாதா அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை! எந்த வழக்கில் தெரியுமா?
ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு