தமிழகம் முழுவதும் பிரபல ஜவுளி கடைகளில் திடீர் சோதனை..!

By vinoth kumarFirst Published Sep 15, 2021, 11:54 AM IST
Highlights

ஜவுளிக் கடைகள் போலியான ஆவணங்கள் தயாரித்து வணிக வரி ஏய்ப்பு செய்ததாக வணிகவரித் துறைக்குப் புகார்கள் வந்தன. ஜவுளிக் கடைகள் விற்பனை மற்றும் கொள்முதலைக் குறைத்துக் காட்டி போலியான ஆவணங்கள் மூலம் குறைவான வரியைக் கட்டியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சென்னை சில்க்ஸ், ஆர்.எம்.கே.வி., போத்தீஸ், நல்லி சில்க்ஸ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட இடங்களில் வணிக வரித்துறையினர் சோதனை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ஜவுளிக் கடைகள் போலியான ஆவணங்கள் தயாரித்து வணிக வரி ஏய்ப்பு செய்ததாக வணிகவரித் துறைக்குப் புகார்கள் வந்தன. ஜவுளிக் கடைகள் விற்பனை மற்றும் கொள்முதலைக் குறைத்துக் காட்டி போலியான ஆவணங்கள் மூலம் குறைவான வரியைக் கட்டியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் 39 கடைகள், நெல்லையில் 15 கடைகள், கோவை, மதுரையில் தலா 13 கடைகள் எனத் தமிழகம் முழுவதும் 130க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று மாலை அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சென்னை சில்க்ஸ், ஆர்எம்கேவி, போத்தீஸ், நல்லி சில்க்ஸ், ஆனந்தம் ரீட்டைல்ஸ் பி. லிட், உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. 

ஒவ்வொரு இடத்திலும் தலா 4 பேர் கொண்ட அதிகாரிகள், வரி ஏய்ப்பு நடைபெற்று இருக்கிறதா என சோதனை நடத்தினர். மாலையில் தொடங்கிய சோதனை நள்ளிரவு வரையிலும் நீடித்தது. 

click me!