நேற்று ஒரு கதாநாயகன் கட்சி ஆரம்பித்து உறுப்பினர்களை சேர்த்து வருவதாக தெரிவித்த வேல்முருகன், தமிழகத்தில் கூத்தாடிகளை கொண்டாடுகின்ற நிலையை உடைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
விஜய்யுடன் மோதும் வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமை கட்சியை TVK என அழைத்து வரப்படுகிறது. இந்த சூழ்நிலையில், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகமும் TVK என அழைக்கப்படுகிறது. இதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே எனது கட்சியை TVK என அழைக்கும் நிலையில் விஜய் கட்சிக்கு எப்படி TVK என அழைக்கலாம் என தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில் நடிகர் விஜய் அரசியல் வருகையை வேல்முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை அடையாறில் முத்தமிழ் பேரவையில் எழுத்தாளர் அஸ்வகோஷ் எ இராசேந்திர சோழன் அவரின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார்.
விஜய் ரசிகர்கள் கல்லால் அடிப்பாங்க
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழின மக்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால் கண்டிப்பாக நான் முன் வந்து நிற்பேன். எனக்கு தற்போது வருகின்ற கோபமும் வேகமும், ராஜேந்திரன் அய்யாவுக்கு அப்போதே வந்தது என்பது பெருமைக்குரிய விஷயம் என குறிப்பிட்டார். நேற்று ஒரு கதாநாயகன் கட்சி ஆரம்பித்து உறுப்பினர்களை சேர்த்து வருகிறார்,
அந்த கட்சியின் பெயர் கூட எனக்கு தெரியவில்லை. இணையதளமே பிளாக் ஆகிவிட்டதாக கூறுகிறார்கள். 50 லட்சம் பேர் என்று ஊடகத்தில் செய்தி வெளியிட்டு வருகிறார்கள். தமிழகத்தில் கூத்தாடிகளை கொண்டாடுகின்ற நிலையை உடைக்க வேண்டும், நான் பேசி சென்று விட்ட பிறகு விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் அடிக்கக்கூடும் என வேல்முருகன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
நாளுக்கு நாள் வலுவடையும் தமிழக வெற்றிக் கழகம்.. விருதுநகரில் தடபுடலாக நடந்த ஆலோசனை கூட்டம் - வீடியோ!