தமிழகத்துக்கு தடுப்பூசிகள் எப்போது அனுப்பப்படும் என்பது ஜூன் 6ம் தேதிக்கு பிறகே தெரியும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு தடுப்பூசிகள் எப்போது அனுப்பப்படும் என்பது ஜூன் 6ம் தேதிக்கு பிறகே தெரியும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் ;- ஜூன் மாதம் 42.58 லட்சம் தடுப்பூசி டோஸ் ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய அரசிடம் இருந்து இந்த மாதத்திற்கான 1.74 லட்சம் தடுப்பூசி டோஸ் வரவேண்டியுள்ளது. கடந்த மாதம் தமிழகத்திற்கு 2 மடங்கிற்கு மேல் தடுப்பூசி டோஸ் ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு கூறியது.
undefined
தற்போது இருப்பில் உள்ள தடுப்பூசிகளை ஆட்சியர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் தடுப்பூசிகளை வீணாக்காமல் முழுமையாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட பொதுமக்கள் தற்போது அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். தடுப்பூசி இல்லாததால், ஜூன் 3 முதல் 5 வரை தடுப்பூசி போட முடியாது. ஜூன் 6இல் முதல் கட்டமாக 3 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வரும். இதுவரை தமிழகத்திற்கு 96.18 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. நேற்று வரை 87 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 4.93 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. கையில் உள்ள தடுப்பூசிகள் நாளையுடன் தீர்ந்து விடும். கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் தொற்றை குறைக்க தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இறப்பு சான்றிதழ் ஆய்வுக்கு பின் வழங்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.