இந்த 3 மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்குமாம்... வானிலை மையம் எச்சரிக்கை...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 31, 2021, 01:44 PM ISTUpdated : May 31, 2021, 01:45 PM IST
இந்த 3 மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்குமாம்... வானிலை  மையம் எச்சரிக்கை...!

சுருக்கம்

வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு. மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

வெப்பச்சலனம் மற்றும் உள் தமிழகத்தில் 3 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனழமையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பொய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதேபோல் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், உள் மாவட்டங்களில் ஓரிய இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை. காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாளை மறுநாளைப் பொறுத்தவரை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாலட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும்,  வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை, மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு  மையம் எச்சரித்துள்ளது. குமரிக்கடல், இலங்கையின் தெற்கு கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

TVK Supporter Arrested: சென்னையில் அதிர்ச்சி! வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளரை தட்டி தூக்கிய போலீஸ்! சிக்கியது எப்படி?
Chennai : சென்னைையே மாறப்போகுது.! பேருந்து – ரயில் கனெக்டிவிட்டி ரெடி.. இதை கவனிச்சீங்களா!