அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்... கூடுதலாக 52 மருத்துவமனைகள் சேர்ப்பு... தமிழக அரசின் அதிரடி...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 29, 2021, 05:56 PM IST
அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்... கூடுதலாக 52 மருத்துவமனைகள் சேர்ப்பு... தமிழக அரசின் அதிரடி...!

சுருக்கம்

அரசு ஊழியர்களுக்கான இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கூடுதலாக 52 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் மருத்துவ காப்பீட்டு திட்டம் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் மட்டுமல்லாது அவர்களுடைய குடும்பத்தினரும் பயன் பெறலாம். தற்போது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகளுக்கு அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இரண்டும் உள்ளன. தனியார் மருத்துவமனைகள் மூலம் காப்பீடு திட்டத்தின் கீழ் குறைந்த செலவில் மருத்துவம் செய்யப்படும் என்பதால் ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் ஊழியர்களுக்கான இலவச காப்பீடு திட்டத்தில் கூடுதலாக 52 மருத்துவமனைகளை சேர்க்க தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். 

ஏற்கனவே அரசு ஊழியர்கள் காப்பீடு திட்டத்தில் கீழ் செயல்பட்ட 5 மருத்துவமனைகள் நீக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே காப்பீட்டு திட்டத்தில் உள்ள ஓர் மருத்துவமனையில் கூடுதலாக சில சிகிச்சை முறைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு மருத்துவமனையின் பெயர் மாற்றத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று தீயாய் பரவி வரும் இந்த நெருக்கடியான சமயத்தில், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கூடுதலாக 52 மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டுள்ளது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!