Urban election: நகர்புற உள்ளாட்சி தேர்தல்.. வேட்பாளர்களுக்கு கிடுக்கிப்பிடி.. புதிய விதிமுறைகள் என்னென்ன?

By vinoth kumarFirst Published Jan 23, 2022, 7:04 AM IST
Highlights

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி வருகிற 27-ம் தேதிக்குள் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களுக்கான வைப்புத்தெகை (டெபாசிட்) இரண்டு மடங்காக உயர்த்தி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி வருகிற 27-ம் தேதிக்குள் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதனிடையே, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன் பேரில் சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்தனர். 

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விதிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களுக்கான வைப்புத்தெகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.4,000 நகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.2,000 பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ரூ.1,000 என காப்புத்தொகையாக நிர்ணயித்துள்ளது.மேலும் பட்டியலினத்தினர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் காப்புத் தொகையில் பாதி செலுத்தினால் போதுமானது என மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகளில் தெரிவித்துள்ளது.

வேட்பாளர் பெயரிலோ, கட்சிகள் பெயரிலோ மற்றும் அது தொடர்பான வாசகங்கள் அச்சிடப்பட்ட எவ்விதமான விளம்பர சுவரொட்டிகளோ, டிஜிட்டல் பேனர்களோ, கட்- அவுட்களோ, சுவரில் எழுதப்பட்டோ மாநிலத்தின் எந்த இடத்திலும் இருக்கக்கூடாது. இந்த முறை ஒலிப்பெருக்கி பயன்படுத்துவது தொடர்பாக கடும் கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள் மற்றும் அவரது முகவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

click me!