கமிஷனர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

Published : Aug 06, 2019, 02:18 AM IST
கமிஷனர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

சுருக்கம்

நகை மோசடி செய்த நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க கோரி, பெண் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நகை மோசடி செய்த நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க கோரி, பெண் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று திங்கட் கிழமை என்பதால் பொதுமக்கள் அதிகளவில் புகார் அளித்து வந்தனர். அப்போது, 3வது நுழைவாயில் முன்பு நேற்று மதியம் பெண் ஒருவர் வந்தார். திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில் கையில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.


 

இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று பெண் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். உரிய நேரத்தில் போலீசார் பெண்ணை மீட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சம்பவம் குறித்து வேப்பேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் தற்கொலைக்கு முயன்ற ெபண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, கண்ணகி நகரை சேர்ந்த பாத்திமா (55) என்றும், இவர் வீட்டின் அருகில் வசிக்கும் பஷீர் என்பவருடன் பழகி வந்துள்ளார். அந்த பழக்கத்தால் தன்னிடம் உள்ள 10 சவரன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் பணத்தை பஷீரிடம் கொடுத்துள்ளார்.

பிறகு நகை மற்றும் பணத்தை கேட்டபோது அவர் கொடுக்க முறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கண்ணகி நகர் காவல் நிலையத்தில் பாத்திமா புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாத்திமா, நகை, பணம் மோசடி செய்த பஷீர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கமிஷனர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இதனால் சிறிது நேரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!