கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி... சிவநேசனின் பிரதே பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்...!

By vinoth kumarFirst Published May 10, 2020, 1:11 PM IST
Highlights

சென்னை தி.நகரில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உயிரிழந்த பிரபலமான நிறுவனத்தின் மேலாளரும், மருந்து வல்லுநர் சிவநேசனுக்கு கொரோனா தொற்று இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை தி.நகரில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உயிரிழந்த பிரபலமான நிறுவனத்தின் மேலாளரும், மருந்து வல்லுநர் சிவநேசனுக்கு கொரோனா தொற்று இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை தி.நகரில் வசித்து வருபவர் ராஜ்குமார். மருத்துவரான இவரும், பெருங்குடியைச் சேர்ந்த சிவநேசன் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். சிவநேசன் கடந்த 27 வருடமாகச் சுஜாதா பயோ டெக் என்ற நிறுவனத்தில் புரோடக்சன் மேனேஜராக, காசிப்பூரில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சளி மருந்து உட்பட பல்வேறு மருந்துகளைக் கண்டுபிடித்ததில் முக்கிய பங்காற்றியதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது உலகத்தையே உலுக்கி வரும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். சோடியம் நைட்ரேட் மூலம் நைட்ரிக் ஆக்ஸைடு தயாரித்தால் கொரோனாவை எப்படியும் கட்டுப்படுத்திவிடலாம் எனக் கூறி, தீவிரமாக கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த சோதனைகள் அவரது நண்பரான மருத்துவர் ராஜ்குமார் வீட்டில் நடந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் பரிசோதனையிலிருந்த சிவநேசன், சோடியம் நைட்ரேட் கரைசலைப் பரிசோதனைக்காக அவரே குடித்துள்ளார். குடித்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை, உடனடியாக தி. நகரில் உள்ளார் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவநேசன் பரிதாபமாக உயிரிழந்தார். கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பதாகக் கூறி, ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவலறிந்த தேனாம்பேட்டை போலீசார் ராஜ்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், இது தொடர்பான  பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த மருந்து கம்பெனியின் மேலாளர் சிவனேசன் சளி மாதிரியை ஆய்வு செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது. 

click me!