மீண்டும் முதலிடம் வந்த ராயபுரம்..! சென்னையில் எகிறியடிக்கும் கொரோனா பாதிப்பு..!

Published : May 10, 2020, 12:38 PM ISTUpdated : May 10, 2020, 12:41 PM IST
மீண்டும் முதலிடம் வந்த ராயபுரம்..! சென்னையில் எகிறியடிக்கும் கொரோனா பாதிப்பு..!

சுருக்கம்

கடந்த 2 நாட்களாக சென்னையில் இருக்கும் 15 மண்டலங்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தில் இருந்தது. இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி கோடம்பாக்த்தை பின்னுக்கு தள்ளி மீண்டும் ராயபுரத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்தை நெருங்கியிருக்கும் நிலையில் 2,109 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அசுர வேகமெடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,535 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே தலைநகர் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வெளியான அறிவிப்பில் சென்னையில் மட்டும் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,330 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 2 நாட்களாக சென்னையில் இருக்கும் 15 மண்டலங்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தில் இருந்தது. இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி கோடம்பாக்த்தை பின்னுக்கு தள்ளி மீண்டும் ராயபுரத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கடுத்தபடியாக கோடம்பாக்கத்தில் 563 பேருக்கும், திரு.வி.க.நகரில் 519 பேருக்கும்,  தேனாம்பேட்டையில் 360 பேருக்கும், வளசரவாக்கத்தில் 274 பேருக்கும், அண்ணா நகரில் 248 பேருக்கும், கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதே போல தண்டையார்பேட்டையில் 231 பேர், அம்பத்தூரில் 167 பேர், அடையாறில் 159 பேர் கொரோனாவால் பாதிப்படைந்து தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருவொற்றியூரில் 64 பேருக்கும், மாதவரத்தில் 46 பேருக்கும், பெருங்குடியில் 35 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 25 பேருக்கும், கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மணலியில் 27 பேரும், ஆலந்தூரில் 25 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர். சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி துரிதப்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Chennai Power Cut: மே 24ம் தேதி.. ஞாயிற்றுக்கிழமை அதுவுமா சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
TVK Supporter Arrested: சென்னையில் அதிர்ச்சி! வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளரை தட்டி தூக்கிய போலீஸ்! சிக்கியது எப்படி?